மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு!
கண்டி- கலஹாவில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்தோட்டைப் பகுதியில் இருந்து கண்டி நகர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கலஹா நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் பாதையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியுள்ளது.
உயிரிழப்பு
இதனால் படுகாயமடைந்த 73 வயதுடைய அந்தப் பெண் கலஹா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று(16) உயிரிழந்தார்.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
