இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் :பொய்யுரைத்த கடற்படை தளபதி
கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.ராஜசிங்கன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(16) அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என கடற்படை தளபதி கூறியுள்ளார்.
கைது
அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்களை கைது செய்ததும் கடற்படையினரே.இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
