காணாமல்போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
இரத்தினபுரி- கலவானை பகுதியில் காணாமல் போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமான மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது இன்றையதினம் (11) இரத்தினபுரி- கலவானை, வெத்தாகல பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலவானை, வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்பு
மேற்படி வயோதிபர் நேற்று(10) வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் வயோதிபரின் உறவினர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போது கிணற்றிலிருந்து சடலத்தைக் கண்டுபிடித்த நிலையில் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்க அனுப்பி வைத்துள்ளனர்.
வயோதிபர் கிணற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
