முத்து நகர் விவசாயிகளை கைது செய்த பொலிஸார்..!
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை சீனக் குடா பொலிஸார் இன்று (11)கைது செய்துள்ளனர்.
குறித்த விவசாயிகள் முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்தும் போது அத்து மீறி தனியார் காணிக்குல் நுழைந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
விவசாயிகள் கைது
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றையும் கையகப்படுத்தியதாக தெரியவருகின்றது.
அண்மையில் விவசாய காணி அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை குறித்த முத்துநகர் விவசாயிகள் நடாத்தி வருகின்றனர்.
தற்போது தனியார் காணி எனவும் உரக் கம்பனி ஒன்றுக்கு சொந்தமான காணி எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகிறது.

அண்மையில் நாடாளுமன்றிலும் ஊடகங்களிலும் முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு தொடர்பில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

இந்த நிலையால் எஞ்சிய காணியில் விவசாயம் செய்யலாம் என ஆளுங்கட்சி பிரதியமைச்சர் பேசியதால் நெற் செய்கைக்கான தயார்படுத்தலை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam