இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு! தென்னிலங்கையில் சிக்கிய முதியவர்
களுத்துறை, பிங்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 52, காலி வீதி பிரதேசத்தில் ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகள் குழுவினால் நேற்று (27.11.2026) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு ரி - 56 ரக துப்பாக்கி, அதற்கான மகசின் ஒன்று, 13 தோட்டாக்கள் மற்றும் 11 பயிற்சித் தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

பிங்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பிங்வத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.