சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய முதியவர் கைது
அம்பாறை சம்மாந்துறையில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை நேற்றையதினம் (30.09.2024) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றிருந்ததுடன் சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 60 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
விசாரணை நடவடிக்கைகள்
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
