முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலையில் மாற்றம் இருக்காது என்று இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர(Ajith Gunasekara) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விலையில் மாற்றம் இல்லை...
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் வரை கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாகவே பேண முடியும்.
அதுவரை காலமும் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
