சீன எதிர்ப்பு கொள்கை: இந்திய உறவை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்
சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை அமெரிக்கா எதிர்ப்பதாகவும், இந்தியா உடனான உறவை புத்துயிர் பெற முயற்சி செய்கிறோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் தாய்வானில் ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு ஆதரவாகவும் அமெரிக்கா நிற்கும்.
மேலும், பசுபிக், இந்தியா, அஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா உடனான உறவுகளை புத்துயிர் பெற செய்து வருகிறோம்.
அமெரிக்கா வீழ்ச்சி
சீனா எழுச்சி பெற்று வருகிறது. அமெரிக்கா வீழ்ச்சி அடைந்து வருகிறது என பலர் கூறுகின்றனர்.
ஆனால், அமெரிக்கா தான் எழுச்சி பெற்று வருகிறது. உலகில் சிறப்பான பொருளாதாரத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.
இதன்படி நான் ஜனாதியதியாக பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா ஜிடிபி எழுச்சி பெற்று வருகிறது. சீனா உடனான வர்த்தக பற்றாக்குறை குறைந்து வருகிறது.
மேலும், அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பத்தை சீனாவால் பயன்படுத்த முடியாது. சீனாவிற்கு எதிரான எனது கடுமையான அணுகுமுறையை, இதற்கு முன்னர் ஜனாதியதியாக இருந்தவர் பின்பற்றியது இல்லை.
இதற்கமைய 21ம் நூற்றாண்டில் சீனாவிற்கு எதிரான போட்டியில் அமெரிக்கா வலுவாக உள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
