கனடாவில் அதிர்ச்சியை தோற்றுவித்த நிஜ்ஜார் படுகொலை விவகாரம்: வெளியானது சிசிரீவி காட்சிகள்
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சிசிரீவி காட்சிகள் தற்போது கனேடிய பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாத நபர்கள் நிஜ்ஜாரின் வாகனத்தை மறித்து அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவதை குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 50 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது 34 குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
CBC Canada has now published footage of Nijjar's murder
— Crime Reports India (@AsianDigest) March 9, 2024
pic.twitter.com/1DaLNoGYOP
கனடா அதிகாரிகள் விசாரணை
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பகுதியான குருத்வாராவில் உள்ள சிசிரீவி கருவியில் தாக்குதல் சம்பவம் பதிவான நிலையில் அதை வைத்து கனடா அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
காலிஸ்தான் அமைப்பின் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் இந்தியாவின் இரகசிய முகவர்கள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கப்படுத்தியிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டை இந்தியா முழுவதுமாக மறுத்தது. ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே கடும் மோதல் போக்கு உருவாகியது.
இதனை தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இந்தியா - கனடா விரிசல்
இதன் காரணமாக இருநாடுகளின் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழல் உருவாகியது. இந்நிலையில் ''கனடா விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு அறிக்கை அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குவதகாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதன்படி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் , இந்தியா - கனடா இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்படுத்தியிருந்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்கள் எதையும் கனடா வழங்கவில்லை என்று இந்தியா கனடாவை குற்றம் சுமத்தியது. இவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை மோதலும் அதிகரித்தது.
இந்த நிலையில், தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக சிசிரீவி பதிவும் வெளியாகியுள்ளது.
அதாவது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே வைத்து ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தனது வாகனத்தில் இருந்த போதுதான் இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி செல்லும் காட்சி இதில் பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 50 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது 34 குண்டுகள் பாய்ந்ததாகவும் அங்கிருந்த சில குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
