கனடா ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழர்கள்
83 ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடித்தார் டக் போர்ட்
ஒன்ராறியோவின் 43 ஆவது சட்டமன்றத்தில், டக் போர்ட் தலைமையிலான முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது.
ஒன்ராறியோவின் 43 ஆவது சட்டமன்றத்தில், டக் போர்ட் தலைமையிலான முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. என்டிபி கட்சி 31 ஆசனங்களை கைப்பற்றி மீண்டும் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.
லிபரல் கட்சி 8 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் உள்ளது. பசுமைக் கட்சியும், சுயேட்சை வேட்பாளரும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
விஜய் தணிகாசலம்
ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
தற்போதைய நிலவரப்படி எண்ணப்பட்ட 34,602வாக்குகளில் 15,732 வாக்குகளை (45.03%) சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மணல் அப்துல்லாஹி (லிபரல்) 27.05 வீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், பெலிசியா சாமுவேல் (என்.டி.பி.) 21.9% சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
லோகன் கணபதி
மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியில் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி 14,011 வாக்குகளை பெற்று (48.8%) வெற்றி பெற்றார்.
லிபரல் வேட்பாளர் சாண்ட்ரா டாம் 10,763 (37.5%) வாக்குகளையும், என்.டி.பி. வேட்பாளர் மத்யூ ஹென்ரிக்ஸ் 2,597 (9%) வாக்குகளையும் பெற்றனர்.
ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய-தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.