வறட்சியான வானிலை! பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு

Ministry of Education Weather Sri Lankan Schools
By Dhayani Mar 30, 2026 11:27 AM GMT
Report

வறட்சியான வானிலைக்கு மத்தியில், பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு

ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) - அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்).

வறட்சியான வானிலை! பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு | Education Ministry School Schedule Announcement

2. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) - அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல்.

3. வெப்பத்தாக்கம் (Heat Stroke) - உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல்.

முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து 'சுவசரிய' நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும்.  

பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது. நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்).

பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது. 

வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல்.

பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்).

வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்கக் கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்.

மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல்.  

மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை

அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல்.

அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல். அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்).

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல். சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது.

தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல்.

அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்

 

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US