வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி! வேதநாயகன் இடித்துரைப்பு
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
சமூகசேவைகள்
'' சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு இன்னமும் காத்திரமுள்ளதாக மாற்றுவோம் என அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தனது உரையில், வடக்கு மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிமாகாணங்களில் கல்வி பயிலும் மாணவர்களையும் இந்தத் திட்டத்தில் உள்ளீர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இந்தத் திட்டம் மீளாய்வு செய்யப்படும்” என்று வடக்கின் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |