வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி - இன்று முதல் நடைமுறையில்..
இணையம் மூலம் பொது பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த செயற்பாடுகளை விரிவுபடுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2001ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் உள்ள பொதுப் பரீட்சைகளின் சான்றுப்பத்திரங்களை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
சான்றுப் பத்திரங்கள்
கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர சான்றுப் பத்திரங்களை இணையம் மூலம்பெற்றுக்கொள்ளாலாம்.
இந்த புதிய முறைமை இன்று முதல் வெளிவிவகார அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். உரிய சான்றுப் பத்திரங்களின் டிஜிட்டல் பிரதிகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைகள் திணைக்களம்
விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கும் போது தமது மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடல் வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தை நாடி பெற்றுக்கொள்ள
முடியும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
