வாக்களிக்கும் முறை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள்
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
இச்செயலமர்வானது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.10.2024) யாழ். மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தியோகத்தர்கள்
இதன்போது, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி மக்களுக்கு தெளிவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபடுபடவுள்ள, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு தெளிவூட்டப்பட்டது.

மேலும், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்ஜால் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam