பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் சவாலான சூழ்நிலைகள் காரணமாக, இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 வீதம் ஆகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக தற்போதைய உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழல் ஆகியவை இலங்கையின் எதிர்கால பொருளாதாரப் பயணத்தில் கடுமையான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டம் தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
மத்திய கிழக்கு யுத்த சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது, இலங்கையின் பணவீக்க உயர்வுக்கு வழிவகுப்பதுடன், நடப்புக் கணக்கு சமநிலையை பலவீனப்படுத்தக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை மூலமான வருமானம் வீழ்ச்சியடைவதும் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவதற்கு மேலும் ஒரு காரணியாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான பொருளாதார சீர்திருத்த திட்டங்களை இலங்கை வலுவாக செயல்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தின் மீளெழுச்சித் திறன் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய, வெளிநாட்டு கொடுப்பனவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான சில நிபந்தனைகளை இலங்கை இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam