தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும் - ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

Ranil Wickremesinghe President of Sri lanka Rajapaksa Family Child Abuse Law and Order
By Rakesh May 28, 2026 11:58 PM GMT
Report

ஜனாதிபதி நாட்டின் பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ராஜாங்கனை சத்தாரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விகாரைகளின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது மற்றும் அங்கு இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் குறித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விசேட காணொளிப் பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு

ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு

ஊழல்வாதிகளை வெளியேற்றல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் ராஜபக்சகள், பிரேமதாஸக்கள் மற்றும் விக்கிரமசிங்க ஆகிய  அரசியல்வாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றியது, நாட்டின் வளங்களைச் சூறையாடிய ஊழல்வாதிகளை வெளியேற்றி, நாட்டைச் சீரமைப்பதற்காகவே தவிர, புனித தலதா மாளிகை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் நாட்டின் ஏனைய விகாரைகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அல்ல.

இன்று சமூக வலைத்தளங்களில் வெறும் சுவாரஸ்யத்துக்காகப் பரப்பப்படும் தவறான கருத்துக்களை நம்பி, அரசு இத்தகைய அபாயகரமான முடிவுகளை எடுக்க முற்படக் கூடாது.

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும் - ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை! | Strict Laws Imposed Monks Rajangana Sattaratana

குறிப்பாக, கலகெடிவத்தை சுதத் மற்றும் கெக்கிராவ சுதர்சன போன்றவர்கள் முன்வைக்கும் இத்தகைய முட்டாள்தனமான கருத்துக்களைக் கேட்டு அரசு செயற்படுமேயானால், அது இந்த அரசுக்குப் பாரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

அதேவேளை, விகாரைகளின் நிர்வாகச் சுதந்திரம் குறித்துப் பேசும் நான், சில விகாரைகளுக்குள் இடம்பெறும் அப்பட்டமான தவறுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

விகாரைகளுக்குள் சிறுவர்களைத் துறவறம் பூணச் செய்து, பின்னர் அவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் அருவருக்கத்தக்க சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

சட்ட நடவடிக்கை

அதேபோல், விகாரைகளுக்கு வரும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண் பக்தர்களைச் சில தரப்பினர் தவறான நோக்கில் அணுகுவதும், விகாரை வளாகங்களுக்குள் வாகனச் சாரதிகள் மற்றும் சில இளைஞர்களை வைத்துக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபடுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

ஒரு பௌத்த பிக்குவானவர், விகாரைக்குத் தர்மம் கேட்டுவரும் தாயையும் மகளையும் மரியாதையுடன் நடத்த வேண்டுமே தவிர, அவர்களைக் தனி அறைகளுக்குள் அழைத்து முறையற்ற வகையில் நடந்துகொள்வது அப்பட்டமான துஷ்பிரயோகமாகும்.

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும் - ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை! | Strict Laws Imposed Monks Rajangana Sattaratana

இத்தகைய விகாரைகளில் வாழும் பிக்குகள், தமது தனிப்பட்ட இன்பத்துக்காகவே மதத்தைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே, விகாரைகளின் நிர்வாக எல்லையைக் கடந்து பௌத்த போதனைகளுக்கு முரணாகவும், இத்தகைய சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து, பொதுச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் மாஃபியா கும்பலின் 232 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

இத்தாலியில் மாஃபியா கும்பலின் 232 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா பயணம்: மார்கோ ரூபியோவுடன் முக்கிய சந்திப்பு!

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா பயணம்: மார்கோ ரூபியோவுடன் முக்கிய சந்திப்பு!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US