கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நபர்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேனமுல்ல முகாம் பகுதியில் வசித்து வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இன்று அதிகாலை வேளையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
உயிரிழந்தவர் கொழும்பு 15, ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் இந்த மரணம் சம்பவித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri