பொருளாதார நெருக்கடி:கொள்கை முடிவுகளை எடுக்க தயாராகும் பிரதமர்
ஏற்றுமதியை இலக்காக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கொள்கை முடிவுகளை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதிகளை அதிகரித்தால் மாத்திரமே நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிரதானிகளுடன் கொழும்பில் உள்ள பிரதமரின் செயலகத்தில் இன்று நடைபெறற சிறப்பு கலந்துரையாடலில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன் அதற்கு தயாராக வேண்டும். தற்போதை உலக பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 70 நாடுகள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றன.
இந்த நாடுகளில் இலங்கை முன்வரிசையில் இருக்கின்றது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருடனான இந்த கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் பிரதானிகள் கலந்துக்கொண்டனர்.