வரிகளை மீண்டும் உயர்த்த இலங்கை அரசாங்கம் அவதானம்
கடந்த 2019ம் ஆண்டு குறைக்கப்பட்ட இறக்குமதி வரி உள்ளிட்ட சில வரிகளை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
தற்போதைய நிலையில் எதிர்வரும் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருக்காது.
அதற்குப் பதிலாக நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
வரி அதிகரிப்பு
அதே போன்று கடந்த காலங்களில் குறைக்கப்பட்ட வரிகளை மீண்டும் உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ஒரே அளவானதாக இருந்த போதும் சீனாவுக்கு கூடுதல் வட்டி வீதம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
அதுகுறித்த தற்போதைக்கு மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.