ஈரான் போர் இன்றே முடிந்தாலும் பொருளாதார பாதிப்புகள் மீள பல மாதங்கள் ஆகும்: IMF எச்சரிக்கை
ஈரான் மீதான போர் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், அதன் தீவிரமான பொருளாதார விளைவுகளைக் கையாண்டு இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் போர்ச் சூழலால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் ஆழமானவை என்று சுட்டிக்காட்டினார்.
கால அவகாசம் தேவை
போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், சர்வதேசச் சந்தையில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலையைச் சீரமைப்பதற்கும், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கும் கால அவகாசம் தேவைப்படும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்தப் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜார்ஜீவா, போர் நீண்டுகொண்டே போவது உலக நாடுகளின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.

நீண்ட கால பாதிப்பு
குறிப்பாக, எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு இந்தப் பாதிப்பு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை நாடுகள் இப்போதே தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தப் போர் உலகப் பொருளாதார வளர்ச்சியை எந்தளவுக்குக் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பதையே IMF தலைவரின் இந்தக் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam