இலங்கையில் பொருளாதார நெருக்கடி: முதன் முறையாக சர்வதேச நாடொன்றிடம் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்கள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து வெளியேறிய படகு ஒன்று அவுஸ்திரேயாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக இடைமறிக்கப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய எல்லைப் படை,
“அவுஸ்திரேலிய அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்த படகையும் நாங்கள் இடைமறித்து படகில் வந்தவர்கள் வந்த இடத்திற்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சட்டப்படியும் சர்வதேச சட்டப்படியான அவுஸ்திரேலிய கடமைகளின் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேயாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் கடந்த ஜனவரி 2020ஆம் ஆண்டு கடைசியாகப் படகு ஒன்று அவுஸ்திரேயாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தியா அல்லாத ஒரு வெளிநாட்டுக்கு இலங்கையின்
மட்டக்களப்பிலிருந்து படகு மூலம் செல்ல முயன்றதாக 40 பேரை இலங்கை
கடற்படையினரால் கைது செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.