நாடு வங்குரோத்தடைய பசிலே காரணம் : சம்பிக்க ரணவக்க - செய்திகளின் தொகுப்பு
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடும் அரசாங்கம் முதலில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று (21.05.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மக்களால் புறக்கணிக்கப்படும் ராஜபக்சர்களை ஒன்றிணைத்துக்கொண்டு முன்னேற்றமடைய முடியாது.
ராஜபக்சர்களின் குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.
75 வருடகாலமாக நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,



