தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
க்யூ.ஆர் கோட் வெளியீடு
எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ இணைய தளமான www.elections.gov.lk இல் இந்த விபரங்களை பார்வையிட முடியும்.
வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய க்யூ.ஆர் கோட் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
QR கோட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
