கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு

Batticaloa Bandula Gunawardane S. Viyalendiran Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Kumar Jan 06, 2024 09:19 AM GMT
Report

கிழக்கு மாகாணத்திற்கான அஞ்சல் நிர்வாக கட்டிட தொகுதியானது மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த  கட்டிட தொகுதியானது இன்று(06.01.2024) போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கும் பொருட்கள்

தொடர்ச்சியாக யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கும் பொருட்கள்

தபாலக கட்டிட தொகுதி

நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டள்ளது.

கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு | Eastern Province Postal Administration Block Batti

அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு | Eastern Province Postal Administration Block Batti

மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் முகமத் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் சிவனேசன்,  இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, மாவட்ட அரசாங்க அதிபர்  ஜெ முரளிதரன் மற்றும் மத குருமார்கள் அரசாங்கத் திணைகள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.

கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு | Eastern Province Postal Administration Block Batti

இந்தப் புதிய அஞ்சல் கட்டிட தொகுதியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபரின் அலுவலகம், வாகன நிர்வாக கணக்கீட்டு பகுதி,  மாகாண அஞ்சல் பயிற்சி நிலையம்,  மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் என்பனவும் அமையப்பெற்றுள்ளன.

அத்துடன் இக்கட்டிடத்தொகுதிக்காக 480மில்லியன் ரூபா தபால் திணைக்களத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு | Eastern Province Postal Administration Block Batti

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வெளிநாட்டவர் மரணம்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வெளிநாட்டவர் மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US