இதுவே கடைசி தடவையாக இருக்கலாம்..! கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி அறிவிப்பு
பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நேற்றைய தினம் (07.05.2023) வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் கருத்து
இதன்போது அவர் கூறுகையில், கிழக்கு மாகாண மக்கள் தம்மை ஆளுநர் என்று அழைப்பது இதுவே கடைசி தடவையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ - பதுர்தின் சியானா

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
