பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டதா..! வடக்கு ஆளுநர் போட்டுடைக்கும் விடயம்
பதவியில் இருந்து விலகுமாறு ஆளுநர்கள் சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பான முக்கிய தகவலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வெளியிட்டுள்ளார்.
வடக்கு உள்ளிட்ட சில மாகாணங்களின் ஆளுநர்களை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அறிவுறுத்தல் குறித்து வெளியான தகவல்

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கருத்து தெரிவிக்கையில், பதவியில் இருந்து விலகுமாறு எனக்கு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து விடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளதாக செய்தி முன்னதாக வெளியாகியிருந்தது.

கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan