கிழக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, இன்று (17.10.2024) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, புதிய ஆளுநருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்கான முதலீடுகள்
மேலும், இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்படவும், சுகாதாரம், கல்வி, கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளின் அபிவிருத்திக்காக முதலீடுகளை மேற்கொள்வதற்கு நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, "சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய கலப்பு இனங்களோடு கிழக்கு மாகாண மக்களின் தேவைகளை செவிமடுத்து, கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வைக் காண எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனும், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்வாகத்தை மிகவும் பாராட்டுகின்றது. அதற்கேற்ப, எதிர்காலத்தில் இலங்கை மற்றும் கிழக்கு மாகாண அரசுடன் மிகவும் இணக்கமாக செயற்படவுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |