உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பின்
குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
மேலும், தேவையான ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டம் 2027ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





