நாட்டின் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழைக்கால வானிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகளை மேலும் நீடித்துள்ளது.
எச்சரிக்கை நீடிப்பு
அதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, உடுதும்பரா மற்றும் பஸ்பாகே கோரல பிரிவுகளுக்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டைக்கும் இவ்வாறு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நார்வட்டத்திற்கும் நிலை 3இன் கீழ் வெளியேற்ற அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் பகல் நேரங்களிலேயே பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.