வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு

Indian fishermen Sri Lanka Fisherman
By Rusath Mar 04, 2024 02:07 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் இழுவை மடி கடற்றொழிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(03) வட பகுதி கடற்றொழிலாளர்கள் கறுப்பு கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கிழக்கு கடற்றொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (04.03.2024) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் வைத்து செட்டிபாளையம் கடற்றொழிலாளர்கள் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், எமது நாட்டில் குறிப்பாக வட பகுதியை இந்தியன் ரோலர் படகுகள் மூலம் இந்திய கடற்றொழிலாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர்.

மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்

மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்

கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டம்

இதனை நாமும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் அவர்களது இச் செயலைக் கண்டித்து நேற்று எமது சகோதர யாழ். கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.


அவர்களது அப்போராட்டத்திற்கு நாம் கிழக்கு கடற்றொழிலாளர்கள் என்ற ரீதியில் எமது பூரண ஆதரவினைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இவ்வாறு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதனால் எமது இலங்கை கடல் வளம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது.

இலங்கை கடல் வளத்திற்கு சொந்தகாரர் நாங்கள் தான், அதனை பயன்படுத்துவதும், பாதுகாப்பதும் நாங்கள் தான். எமது கடல் வளத்திற்குள் எந்த நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் அனுமதியில்லை, இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை கடந்து வருவதானால் எமது வளம் அழிவடைவதோடு, எமது வாழ்வதாரமும் முற்றாக பாதிக்கப்படுகிறது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு | Eastern Fishermen Also Support Northern Fishermen

தற்போது இந்திய கடற்றொழிலாளர்களால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினைபோல் எதிர்காலத்தில் கிழக்கிற்கும் வரலாம். இந்திய கடற்றொழிலாளர்கள் வடபகுதி கடலில் இழுவை மடியைப் பயன்படுத்திவருவதனால் தற்போதும் எமக்கும் அதன் பதிப்புக்கள் எழுந்துள்ளன.இதனால் நாமும் வெகுவாகப் பதிக்கப்படுகின்றோம்.

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை

சுமூகமான தீர்வு

எமது கிராமத்தில் மாத்திரம் 150 இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இப்பிரச்சினை வருமாக இருந்தால் எமது மக்களின் நிலைமை என்னவாகும். வட பகுதி கடற் பிரந்தியத்திலிருந்துதான் கிழக்கு பகுதிக்கும் மீன் இறங்குகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்து அங்குள்ள மீன்களை வடித்துவிட்டு சென்றார்கள் என்றால் நாம் எங்கு போய் வாழ்வாதாரம் செய்வது, இந்த நிலமை நீடித்தால் வடக் கிழக்கு கடற்றொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைமைதான் ஏற்படும்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு | Eastern Fishermen Also Support Northern Fishermen

எனவே இழுவை வலையை வடக்கு கிழக்கிலிருந்து முற்றாகத் தடைசெய்யவேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் துரிதகதியில் செயற்பட வேண்டும்.

எனவே இந்த இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும், சுமூகமான தீர்வை இலங்கை மற்றும் இந்திய அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்: அதிகம் பகிரப்படும் படம்

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்: அதிகம் பகிரப்படும் படம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US