பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை
மட்டக்களப்பில் சீயோன்தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (05) இடம்பெற்றுள்ளது.
இராணுவம், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலய போதகர் மகேசன் ரொசான் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கை
இதேவேளை மாவட்டத்திலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த விசேட ஆராதனையினை முன்னிட்டு பொலிஸார், இராணுவத்தினர், விமானப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை சீயோன் தேவாலயத்தில் பயங்கரவாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் 30 பேர் உயிரிழந்திருந்தனர்.இதன்போது ஆராதனையில் ஈடுபட்டிருந்த 80 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்று 6 வருடம் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் இன்று உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இடம்பெற்றுள்ளது.
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்


மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri