மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (04.04.2026) இரவு நாடளாவிய ரீதியில் மக்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஈரானில் நடைபெற்ற பாரிய தாக்குதல் -அழிக்கப்பட்ட பல இராணுவ தலைவர்கள்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி
நள்ளிரவுத் திருப்பலி
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.








ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam