கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் திடீரென வெளியேறிய சஜித்: கசிந்துள்ள விபரங்கள்!
பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் ‘தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடிய பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் தமக்குக் கிடைத்த கடும் கண்டனத் தொலைபேசி அழைப்புகள் காரணமாகவே நிகழ்வின் இடையிலேயே வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடும் கண்டனத் தொலைபேசி அழைப்புகள்
இந்த நிகழ்வு கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மந்திரயவில் நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைத் தேர்தல் மேடைகளில் தொடர்ச்சியாகக் கூறிவிட்டு தற்போது அதே தரப்பினரின் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்கள் செய்ததை நியாயப்படுத்துதல் மிகவும் கேவலமான மற்றும் கீழ்த்தரமான செயல் எனத் தொலைபேசி மூலம் அழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தொலைபேசி மூலம் கண்டனம் தெரிவித்தவர்களில் சில கத்தோலிக்க குருமார்களும் அடங்குவதாகத் தெரியவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் அக்குருமார்கள் எதிர்பார்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதய கம்மன்பிலவின் இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றமை குறித்து முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஏற்கனவே தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
மேலும் நலின் பண்டார அவர் செல்லவில்லை அது செயற்கை நுண்ணறிவு என்றார்.அதன் பின்னர் கட்சியின் செயலாளர் தாங்கள் சென்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அத்தோடு நேற்று முஜுபுர் ரஹ்மான் நடத்திய ஊகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் வினவியபோது அது எதிர்க்கட்சித் தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri