56 பேர் கொண்ட குழுவுடன் வத்திக்கான் சென்ற கர்தினாமல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
புதிய இணைப்பு
புனித பாப்பரசர் (திருத்தந்தை) பிரான்ஸிஸ் ஆண்டகையின் சிறப்பு அழைப்புக்கு அமைய கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட 56 பேர் கொண்ட குழுவினர் இன்று வத்திகான் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வத்திகான் நோக்கி சென்றுள்ளனர்.
பேராயர் உட்பட 8 ஆயர்கள் கட்டுநாயக்கவில் இருந்து கட்டாரின் தோஹா ஊடாக வத்திகான் சென்றுள்ளனர்.
இவர்களை தவிர பங்கு தந்தைகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உட்பட 18 பேரும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை சேர்ந்த 4 பேர், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தை சேர்ந்த 6 பேரும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை சேர்ந்த 20 பேரும் வத்திகான் சென்றுள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்கவில் இருந்து துபாய் வழியாக வேறு ஒரு விமானத்தில் வத்திகான் சென்றுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பரிசுத்த பாப்பரசரின் பிரான்ஸிஸின் சிறப்பு அழைப்பின்பேரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேர் வத்திக்கானுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்
இன்று காலை அவர்கள் கட்டுநாயக்கவின் ஊடாக வத்திக்கானுக்கு புறப்பட்டு சென்றதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்
அவர்கள் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைத்துச் செல்கிறார்.
ஏற்கனவே கர்தினால் மல்கம் ரஞ்சித், வத்திக்கானுக்கு சென்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் விசாரணைகள் அதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து பாப்பரசருக்கு விளக்கமளித்திருந்தார்.
இதனையடுத்தே தாக்குதல்களின்போது பாதிக்கப்பட்டவர்களை வத்திக்கானுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன



