மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புடன் ஈஸ்டர் ஆராதனை வழிபாடுகள்! குவிக்கப்பட்ட பொலிஸார் - விமானப்படையினர்
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பண்டிகையினை உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலியினை தொடர்ந்து நினைவு கூர்ந்தனர்.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரதான ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலி புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
பலத்த பாதுகாப்பு
ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து விசேட ஆராதனைகள் நடைபெற்று பாஸ்காதிரி நீரில் நனைக்கப்பட்டு நீர் ஜெபிக்கப்பட்டு மக்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது. இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
அத்துடன் 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அவரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.
குவிக்கப்பட்ட பொலிஸார்
இந்த விசேட திருப்பலியில் பங்கு மக்கள் கலந்து சிறப்பித்துத்தடன் நண்பர்கள் ,குடும்ப உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய தினம் வழிபாடுகள் ஆலயத்தில் பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

ஆலயத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் விமானப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆலயத்திற்குள் யாரும் வாகனம் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாமல் ஆலயத்திற்கு செல்வோர் அவதானிக்கப்பட்ட நிலையினையும் காணமுடிந்தது.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்..! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் சூளுரை







ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri