அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்..! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் சூளுரை
பதற்றம் தொடர்ந்தால் ஒட்டுமொத்த பிராந்தியமும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் 'நரகமாக' மாறிவிடும் என்று ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் உயர்மட்ட செயல்பாட்டுக் கட்டளையகத்தின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
பகைமை தீவிரமடைந்தால், இந்தப் பிராந்தியம் முழுவதும் உங்களுக்கு நரகமாக மாறிவிடும், ஈரான் இஸ்லாமியக் குடியரசைத் தோற்கடித்துவிட்டோம் என்ற மாயை, நீங்கள் மூழ்கிப்போகும் ஒரு சகதியாக மாறிவிடும் என்று காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் பேச்சாளரான இப்ராஹிம் சொல்பகாரி என்று குறிப்பிட்டுள்ளார்.
நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்
இதற்கிடையில், கதம் அல்-அன்பியாவின் தளபதி அலி அப்துல்லாஹி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு “நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்” என்று அச்சுறுத்தியுள்ளார்.

ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டவோ அல்லது ஹோர்முஸ் நீரிணையை திறக்கவோ 48 மணி நேரம் அவகாசம் உள்ளது, இல்லையெனில் அந்நாட்டின் மீது "நரகம் கவிழும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இவர்களின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அப்துல்லாஹி, ட்ரம்ப்பை ஒரு “ஆக்ரோஷமான மற்றும் போரைத் தூண்டும்” ஜனாதிபதி என்று அழைத்ததோடு, நாட்டின் உள்கட்டமைப்பைத் தாக்குவேன் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலை ஒரு “விரக்தியான, ஆத்திரமூட்டும், சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை” என்றும் விவரித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானின் உள்கட்டமைப்பைத் தாக்கினால், அமெரிக்க இராணுவம் மற்றும் இஸ்ரேல் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகளை தெஹ்ரான் வரம்பின்றி குறிவைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam