உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதன்படி, வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்
நீதிபதிகளான நவரத்ன மராசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வின் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
நௌபர் மௌலவி உட்பட இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening