நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது, பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான, ஷிரான் பாசிக் துபாயில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.
தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாவார்.
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர், அதன் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தை இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஏழை மக்களின் காணிகளைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் சலவை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை