மீண்டுமொரு தேர்தல் நடந்தால் எமக்கான மக்கள் ஆணை நிரூபணமாகும்: பசில் விளாசல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய்ப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன, இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மொட்டுக் கட்சியை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தாங்கள் போட்ட தாளத்துக்கு ஆடவில்லை என்ற காரணத்துக்காகவே ராஜபக்சர்களைச் சில சர்வதேச நாடுகள் பகைத்தன.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
அவர்கள் போடும் தாளத்துக்கு ஆட ராஜபக்சர்கள் பொம்மைகள் அல்லர். இன்றும் ஒருசில சர்வதேச நாடுகள் மொட்டுக் கட்சியையும் ராஜபக்சர்களையும் அடியோடு வீழ்த்தும் நோக்கில் செயற்படுகின்றன.
குண்டுத் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை
ஆனால், அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் வெற்றியளிக்காது. மொட்டுக் கட்சியோ அல்லது ராஜபக்சர்களோ குண்டுத் தாக்குதல்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை.
பல இலட்சம் மக்களின் ஒருமித்த ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்துக்கு நாம் வந்தோம். அந்த ஆணையை நாம் இன்னமும் இழக்கவில்லை.
மீண்டுமொரு தேர்தல் நடந்தால் எமக்கான மக்கள் ஆணை நிரூபணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri
