பொலிஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாசகர்: விசாரணைகளில் வெளியான சொத்து மதிப்பு
காலி - களுவெல்ல பிரதேசத்தில் 120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நாளாந்தம் 8000 முதல் 10000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.
இந்த யாசகர் 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனவும் அவர், போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள்
களுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பொதியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இராணுவத்தில் கடமையாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த யாசகர் தனது நாளாந்த வருமானத்தில் 3000 ரூபாவை வங்கியில் வைப்பு செய்துவிட்டு தினமும் முச்சக்கர வண்டியில் சென்று சட்டவிரோத மதுபானம் அருந்துவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியில் வைப்பு
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இவர் திருமணமானவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் பராமரிப்புக்காக மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
80 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
