தொழில்நுட்ப போர்: அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த சீனா! கடும் சரிவைச் சந்தித்த ஆப்பிள் நிறுவனம்
கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 16 இலட்சம் கோடி இந்திய ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சிப் வார் எனப்படும் தொழிநுட்ப ரீதியிலான போர் என கூறப்படுகிறது.
தற்போதைய நவீன உலகில் அனைத்து உலக நாடுகளுக்கும் தேவையான முக்கிய இரண்டு விடயங்களாக கருதப்படுவது ஒன்று கச்சா எண்ணெய் மற்றொன்னு குறைகடத்தி (semi conductor).
இந்த குறைகடத்தி (semi conductor) வர்த்தகத்தை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என கேள்வி எழும் பட்சத்தில் இந்த போட்டியில் சீனா மற்றும் அமெரிக்கா களமிறங்குகின்றன.
இந்த பின்னணியில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக ஒரு சட்டம் ஒன்றை இயக்குகிறது. அதாவது processor நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் உடனடியாக அமெரிக்கா வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அரச ஊழியர்களுக்கு தடை
மேலும் சிறப்பான processor களை சீனாவுக்கு அனுப்பினால் அந்த நிறுவனத்தை தடை செய்வோம் எனவும் ஒரு பகிரங்க தகவல் ஒன்றை வெளியிட்டது.
இதனால் சீனா அயல் நாடுகளிலிருந்து processor களை கொள்வனவு செய்யாமல் தங்கள் நாட்டிலே சிறப்பான processor களை உற்பத்தி செய்ய முடிவு செய்தது.
மேலும் அமெரிக்காவின் இந்த நகர்வினால் கோபமடைந்த சீனா, ஆப்பிள் சாதனங்களை அரச ஊழியர்களும் பயன்படுத்தவும் அரசு சம்பத்தப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவதை தடை செய்தது.
இந்த சட்டம் மறைமுகமாக எதிர்காலத்தில் ஐபோன்களை முற்றாக தடை செய்யும் பாதையிலே சீனா செல்கின்றது.
ஆனால் அமெரிக்காவையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலன பங்குகள் சீனாவில் தான் உள்ளன. இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சடுதியான வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |