அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் சுமார் 2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 8ஆம் திகதி உலக தலசீமியா தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவு
தற்போது இலங்கையில் சுமார் 2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையான குழந்தைகள் 'மேஜர் தலசீமியா' (Thalassemia Major) பாதிப்புடன் பிறக்கின்றனர்.

ஏனைய நோய்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றாலும், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக, தலசீமியா மரபணுவை சுமந்து செல்லும் இருவருக்கு இடையே நடக்கும் திருமணங்களைக் குறைப்பது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்காக தற்போது சிறப்புச் சட்டங்கள் எதுவும் இல்லாததால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தலசீமியா மரபணுவை கொண்டிருப்பவர்களுக்கு இடையே நடக்கும் திருமணங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
தற்போது தலசீமியா பாதிப்பு அதிகமாகப் பதிவாகும் ஆறு மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் குருணாகல், அனுராதபுரம், ராகம, மட்டக்களப்பு மற்றும் இன்னும் சில பகுதிகள் முக்கியமானவை ஆகும்.
இந்த மாவட்டங்களில் தலசீமியா சிகிச்சை மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களைப் பரிசோதிக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
அடையாளம் காணப்பட்டவர்களுக்கு சிறப்பு அட்டை
வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் குழுவினர் பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களைப் பரிசோதிக்கின்றனர். யாராவது தலசீமியா மரபணுவை கொண்டிருப்பவராக அடையாளம் காணப்பட்டால், அதற்காக ஒரு சிறப்பு அட்டை வழங்கப்படும்.
பொதுமக்களிடையே திருமணப் பொருத்தம் பார்ப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனையை கட்டாயமாகும். இதன் மூலம் நோயை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் தலசீமியா பிரிவின் இரத்தவியல் நிபுணர் வைத்தியர் சதுர்மா பியரத்னவும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
"தலசீமியா என்பது இரத்தத்துடன் தொடர்புடைய ஒரு மரபணு நோய் நிலைமையாகும். இது இரத்த சோகையை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். ஆனால் இது ஒரு தொற்றுநோய் அல்ல.
இரத்தம் மூலமாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. இது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலம் கடத்தப்படும் ஒரு நோயாகும்.
சில சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படாவிட்டாலும், அவர்கள் தலசீமியா மரபணுவைக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம்.
அத்தகைய இருவர் திருமணம் செய்து குழந்தை பெறும்போது, அந்த குழந்தைக்கு 'மேஜர் தலசீமியா' நிலை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam