நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை
2018ஆம் ஆண்டு புத்தளம், வண்ணாத்தவில்லு, லக்டோவத்த பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை இருவரும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து
மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நௌபர் மௌலவிக்கு செப்டெம்பர் 2026இல் ஏற்கனவே 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அர்னாப் மிகத் தீவிர சூறாவளியாக மாறும் வாய்ப்பு! கடலில் உள்ளவர்களை உடன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு உத்தரவு
you may like this video