உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆய்வுகள்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
2019 ஆம் ஆண்டில், விளக்கமில்லாத தமது இடமாற்றம் குறித்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் குறித்தும், இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபேகுணசேகர, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2019 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சிலிருந்து தாம் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்படவில்லை.
அதேநேரம், தாம் ஒருபோதும் வகிக்காத பதவியான அமைச்சர் ஆலோசகர் பதவிக்காக தாம் பெர்லினுக்கு மாற்றப்படுவதாக தமக்கு தெரிவிக்கப்பட்டது என்றும்; அசங்க அபேகுணசேகர தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம்
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தமது ஆராய்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், 2024 ஜூன் 2 ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஒரு சந்திப்பின்போது, தமது இடமாற்றத்தில் தனிப்பட்ட தலையீடு எதுவும் இல்லை என்று மறுத்த கோட்டாபய ராஜபக்ச, மூத்த ஆலோசகர்களின் முடிவின்படியே அந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டதாக அசங்க தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமது இடமாற்றத்தின் போது, பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் மிலிந்த மொரகோடவின் ஆராய்ச்சியில் தலையிட்டதாகக் கூறப்பட்டதற்காக மன்னிப்பு கேட்குமாறு, அப்போதையை பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரோஹன் குணரத்ன தமக்கு பலமுறை அறிவுறுத்தியதாகவும், அசங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்று தொடர்பாக ஒருபோதும் விளக்கமளிக்கப்படவில்லை. அதேநேரம் மிலிந்த மொரகோட, தமது ஆராச்;சி வெளிப்பாட்டை ஒப்புக்கொண்டாலும், அவர், மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அசங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உயி;ர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தமது ஆராய்ச்சிப் பணியை நிறுத்துவதில் உள் மற்றும் வெளிப்புற மூலோபாய நலன்கள் பங்கு வகித்திருக்கலாம் என்பதை இந்த நிகழ்வுகள் வலுவாக குறித்து நிற்பதாக, இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபேகுணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் அச்சுறுத்தல்
இதற்கிடையில் 2019 ஜனவரியில் இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக, தாம், சமர்ப்பித்த மாதாந்த அச்சுறுத்தல் முன்னறிவிப்பு தொடர்பான எச்சரிக்கைகளை அபேகுணசேகர இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், தாம் வண்ணாத்துவில்லுவில் டெட்டனேட்டர் தொகுதி சம்பவத்தின் அடிப்படையில் ஒரு உயர் அச்சுறுத்தல் ஒன்றை வெளிப்படையாக அடையாளம் காட்டியதாகவும் அசங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணம் தமது கையொப்பத்துடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், உயிர்த்த தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தின் அறிக்கையிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
தாம் குறித்த ஆணையகத்தின் முன்னால், இரண்டு நாட்களாக சாட்சியமளித்து 13 பக்க அறிக்கையையும் சமர்ப்பித்ததாக அசங்க, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், 2019 ஏப்ரல் 4 ஆம் திகதியன்று, இந்திய உளவுத்துறை எச்சரிக்கையைப் பெற்றிருந்தால், அது தமது முந்தைய முன்னறிவிப்புடன் நேரடியாக ஒத்துப்போகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க உதவியிருக்கும் என்பதை, ஜனாதிபதி விசாரணை ஆணையகம் ஒப்புக்கொண்டதாக,தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
எனவே, இந்த விடயங்களை தீவிரமாக ஆலோசித்து, கையாளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபேகுணசேகர வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மை, அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கத்தில் புதைந்து போகக்கூடாது.
அத்துடன், தமது திடீர் இடமாற்றம் தொடர்பாக நீதி நிலைநாட்டப்பட்டால், தாம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும், இலங்கை நாட்டிற்கு சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.
அதேநேரம் முறையான கோரிக்கை கிடைத்தவுடன், விசாரணைக்கு தமது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கமுடியும் என்றும், இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபேகுணசேகர, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
