நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த தாக்குதல்! புதிய ஆதாரங்களை புறக்கணித்த அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்''அடுத்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது.
விபரங்களை ஆராயவில்லை
தாக்குதலில் பின்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல விசாரணைகளை முன்னெடுத்தன. ஆனால் இந்த விசாரணைகள் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஆராயவில்லை.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் வெளிப்படையான சுயாதீன விசாரணைகளிற்காக நாங்கள் விடுத்த வேண்டுகோள்களையும் மன்றாட்டங்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்."'என தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri