சாராவை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டதா? அரசாங்கத்திடம் பகிரங்க கேள்வி
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட நபரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்பவரை நாடு கடத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளதா அல்லது சாராவை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், விசாரணைகளை மூடி மறைக்கும் நோக்கில் அரசாங்கம் சாரா விவகாரத்தில் மெத்தனப் போக்கை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக பொதுவான போராட்டமொன்றை முன்னெடுக்க அனைத்து எதிர்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam