இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் - 4 காணொளி: விசாரணைக்கு தயார்! கோட்டாபய
சனல் 4' ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான 'சனல் 4' தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழு தொடர்பில் கோட்டாபய கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போலிக் குற்றச்சாட்டுக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், "என் மீதான போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த விசாரணைக் குழு முன்னிலையிலும் வாக்குமூலம் வழங்கத் தயாராகவுள்ளேன்.
எனவே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்னை அழைத்தால் அந்த ஆணைக்குழு முன்னிலையிலும் நான் வாக்குமூலம் வழங்குவேன்.
என் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உண்மைகளை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் நான் வாக்குமூலம் வழங்கியே தீர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
