பங்களாதேஷில் நிலநடுக்கம்! கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தம்..
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிற்கு அருகில் இன்று (21) காலை 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் சில பகுதிகளில் கட்டடங்கள் அசைந்ததாகவும் ஆங்காங்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷில் நிலநடுக்கம்
மேலும், இன்று காலை ஷேர் இ பங்களா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்த பங்களாதேஷ் - அயர்லாந்து ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியானது அங்கு ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வு நிலைமை காரணமாக சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்காவில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் மதாப்டி பகுதியிலேயே இன்று காலை 10.08 மணிக்கு சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு ஏற்பட்ட நில அதிர்வில் சில பகுதிகளில் கட்டடங்கள் அசைந்ததாகவும் தற்காலிக கட்டுமான அமைப்புகள் இடிந்து விழுந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன் வீடுகளில் வசித்த குடியிருப்பாளர்களும் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். எனினும், இந்த அனர்த்தத்தில் பாரிய சேதங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri