இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள சி.துரைநாயகம்
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது எனவும் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் (Durainayakam) தெரிவித்துள்ளார்.
குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல மாணவர்கள் உட்பட பெற்றோரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கிண்ணியாவில் இன்று இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற பல சிறார்கள் பரிதாபகரமாக காவு கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். இது மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.
இந்த இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அரசாங்கம் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்னமும் இதுபோன்று பல பகுதிகளில் பாதுகாப்பற்ற இழுவைப்படகு மூலம் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்பவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இவர்களின் போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும் முகமாக பாலங்களை அமைக்கும் நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
