டக்ளஸ் தொடர்பில் சாணக்கியன் கூறுவதில் உண்மை இல்லை: ராஜாங்க அமைச்சர் பதில் (VIDEO)
மட்டக்களப்பு வாழைச்சேனை மீனவத் துறைமுகம் உட்பட்ட வடக்குகிழக்கில் 4 மீன்பிடித்துறை துறைமுகங்கள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சா் திலிப் வெத்தாராச்சி இதனை தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்றத்தில் இன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியனின் கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
ஏற்கனவே மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவிடம், பால்சேனை மற்றும் தளவாய் - பாலம், நாசிவன்தீவு - குடிநீர் பிரச்சினை போன்றவை தொடா்பில் கடந்த ஒரு வருடமாக கோாிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் அவா் இதுவரை உாிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. அவா் பொய் கூறுகிறாா் என்று சாணக்கியன் குறிப்பிட்டாா்.
இதற்கிடையில் இந்திய மீனவா்களுக்கு அப்பால், இலங்கையின் சில மீனவா்களும் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதால், மீன் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சட்டங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் சாணக்கியன் கோாிக்கை விடுத்தாா்..
இதற்கு பதிலளித்த திலிப் வெத்தாராச்சி, அமைச்சா் டக்ளஸ் தேவாநந்தா, இந்த விடயத்தி்ல் பொறுப்பை தட்டிக்கழிக்கவில்லை என்றும் தமக்கு சுதந்திரம் வழங்கியுள்ளமையால் தாம் இந்த விடயத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும் தொிவித்தாா்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
